Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் இன்று காலை விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் தப்பினார் அமீன்.பாடகரான ஏ.ஆர். அமீன் தன் நண்பர் பார்கவுடன் சொகுசு காரில் இன்று காலை பயணம் செய்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது அந்த கார் விபத்தில் சிக்கியது.

கோயம்பேடு பகுதியில் இருந்து காரில் பயணித்துக் கொண்டிருந்த அமீனும் அவரது நண்பரும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த ரேபிடோ கார் உடன் அமீனின் கார் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல் காரணமாக இரு வாகனங்களும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் வெளியானதும், ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அமீனுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

சாலை விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீனின் கார், கால் டாக்சி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

error: Content is protected !!