உத்தர பிரதேச மாநிலம் கோண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதலனை சந்திக்க, மைனர் பள்ளி மாணவி ஒருவர் போலி அடையாள அட்டையுடன் சென்றுள்ளார். சிறை நுழைவாயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, தனது தந்தையிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பதாகவும், காதலனை சந்திக்க சென்றது தெரிந்தால் தந்தை கடுமையாக நடந்து கொள்வார் என்பதால் குண்டுகளை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
