பெங்களூரு அருகே உள்ள பிரசித்தி பெற்ற நந்தி மலைப் பகுதியில் ‘மாண்ட்சூன் மாரத்தான்’ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெங்களூரில் உள்ளத் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் ஜக்டே (31) என்பவரும் இந்த 21 கிலோமீட்டர் அரை மாரத்தான் பிரிவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த இளைஞர் – தீவிர சிகிச்சைப் பலனின்றி மரணம்
மாரத்தான் பந்தயம் தொடங்கி வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். சுமார் பாதி தூரத்தைக் கடந்த நிலையில், ஓடிக்கொண்டிருந்த அமன்தீப் சிங் திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சுருண்டு விழுந்து மயங்கினார். உடனடியாக அங்கிருந்த அமைப்பாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமன்தீப் சிங் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
