Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் பேரணி நடைபெற்றது. போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்

நடைபெற்ற இந்த பேரணியை, கல்லூரி முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும்

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி தாந்தோணிமலை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

error: Content is protected !!