நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து விசில் அடித்த கவுன்சிலர் அல்லா பிச்சை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த இவர், 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மாநகராட்சி கூட்டத்திற்கு தவெக துண்டுடன் வந்த அவர், கூட்டத்தின்போது விசில் அடித்ததாக கூறப்படுகிறது. விசில் அடிப்பதை நிறுத்துமாறு மேயர் எச்சரித்தும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விசில் அடித்ததால், கவுன்சிலர் அல்லா பிச்சை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
