சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
