தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்காக தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: சீமான் வரவேற்பு
