Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

கரூர் மாநகராட்சியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நாள்தோறும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட 760 ரூபாய்க்கு பதிலாக 520 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகமும் பொதுமக்களும் தரக்குறைவாக நடத்துவதை தடுக்க வேண்டும், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், போனஸ் வாங்க வேண்டும், அதிகளவு பணி சுமை, மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணிப்பு செய்து மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக கரூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளும் பணி மற்றும் சுத்தம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!