புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
