வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில், சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை வாசித்தார். மேலும், ‘இதுதொடர்பாக சிறுபான்மை சமூக தலைவர்கள் நேற்று முதலமைச்சரை சந்தித்து, சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தினர். FCRA மசோதா மூலம் சிறுபான்மை அமைப்புகளின் சொத்துரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது” என்றார்.
FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்
