மத்திய பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரியை ராணுவ வீரர்கள் மீட்டு பெரும் விபத்தை தடுத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. ரயில் வந்து கொண்டிருந்தபோது,

அதிக பாரம் ஏற்றிய லாரி, ரயில் கிராஸிங் லைனில் பாதியிலேயே நின்றுவிட்டது. அப்போது அவ்வழியே சென்ற சிறப்பு ஆயுதப் படை வீரர்கள் உடனடியாக தங்களது முழு பலத்துடன் லாரியை பின்னோக்கி தள்ளினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
