சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில், சவூதி அரேபியா உட்பட 14 நாடுகள் இணைந்த புதிய சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணை ஆகிய முக்கிய பகுதிகளில் கப்பல் போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குவைத், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
