Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இனி லஞ்சம் கொடுத்தால் பார் க்ளோஸ்- வாங்கினாலும் ஆக்சன்- மாநகர கமிஷனர் வார்னிங்

இனி லஞ்சம் கொடுத்தால் பார் க்ளோஸ்- வாங்கினாலும் ஆக்சன்-

மதுபான கடை உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், மீறி லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

நகரில் இயங்கி வரும் FL-2 மற்றும் FL-3 வகை உரிமம் பெற்ற சுமார் 230 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற சிறப்பு ஆலோசனை கூட்டத்திலேயே அவர் இந்த தெளிவான உத்தரவை பிறப்பித்தார்.

சமீபகாலமாக, உரிமம் பெற்ற நேரத்தை தாண்டியும் மதுபானக் கூடங்களை இயக்குவது, அனுமதி பெற்ற எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது மற்றும் உணவு பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் குறித்துக் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்தச் சூழலில், மதுபானக் கூட உரிமையாளர்கள் காவல் அதிகாரிகளை சட்டவிரோத வெகுமதிகள் மூலம் கவர முயலக் கூடாது என எச்சரித்த ஆணையர், இதில் மீறல்கள் கண்டறியப்பட்டால் இரு தரப்பினர் மீதும் எவ்விதத் தாட்சணியமுமின்றி குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு முக்கிய நடைமுறையாக, காவல் ஆணையர் உரிமையாளர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கு முன்பாக அரங்கத்தில் இருந்த கீழ்நிலை காவல் அதிகாரிகள் அனைவரும் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

காவல்துறையினரின் அழுத்தம் அல்லது அச்சமின்றி, மதுபானக் கடை உரிமையாளர்கள் தங்கள் தரப்புப் பிரச்சினைகளையும் கருத்துகளையும் சுதந்திரமாக எடுத்துரைக்கவும், நேரடி வழிகாட்டுதல்களைப் பெறவும் இந்த நடவடிக்கை வழிவகுத்தது. காவல் ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை மற்றும் பார் உரிமையாளர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!