கும்பகோணம் அருகே உற்பத்தி செய்த நெல்கலை வீணாகாமல் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
கும்பகோணம் அருகே கொள்முதல் செய்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள 10 ஆயிரம் முட்டை நெல்களும் தண்ணீர் சூழ்ந்து நிற்கும் பரிதாபம்
கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி சாத்தங்குடி கொத்தங்குடி திருநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து திருநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில்

கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 20,000 நெல் மூட்டைகள் இயக்கம் நடைபெறாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. போதுமான படுதாக்களும் இல்லாததால்

திருநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று பெய்த கனமழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளது. 15 நாட்களாக நெல் ஏற்றுவதற்கு லாரிகள் வராததால் விவசாயிகள் கொண்டு வந்து கொட்டி உள்ள சுமார் 10,000 மூட்டை நெல்களும் பல நாட்களாக கொள்முதல் நடைபெறாமல் உள்ளது. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பல ஆயிரம் முட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது

விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்களை சூழ்ந்து தண்ணீர் நிற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை பாதுகாப்பதற்கு போதுமான படுதாக்கள் இல்லாததால் வெளியில் இருந்து விவசாயிகள் வாடகைக்கு எடுத்து வந்து நெல்லை பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. விவசாயம் செய்த நெல்லில் பெறப்படும் தொகை கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல்லை பாதுகாப்பதற்கு படுதா வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கே சரியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் விவசாயிகள் பல நாட்களாக கொட்டப்பட்டுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
