திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்கப்பட உள்ளது. இதற்காக 123 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேர்காணல் மூலம் 40 உணவு தயாரிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு வாகனங்கள் தலா ரூ.1.07 லட்சத்தில் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் ஃபுட் ஸ்ட்ரீட் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
