திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அப்துல் கரீம் என்பவர், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் விற்பனைக்காக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. உடனே, போலீசார் அப்துல் கரீம் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
