சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விடுதியில் தங்கியிருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷினி (26) என்ற பி.காம்., பட்டதாரி பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்தான் ஐபோன்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
