பிரதமர் மோடிக்கு கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விட்டதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.52.2 கோடி கிடைத்துள்ளது. 2021 முதல் 2025 வரை 7 கட்டங்களாக அவருக்கு வழங்கப்பட்ட கலைப் பொருள்கள், சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 2023-ல் மட்டும் சுமார் ரூ.30 கோடிக்கு அவரின் பொருள்கள் ஏலம் போயின. குறிப்பாக துல்ஜா பவானி சிற்பத்தை ரூ.1.03 கோடிக்கு போட்டி போட்டு வாங்கியுள்ளனர்.
