பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்பட படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவருக்கு ஐதராபாத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் இன்று (ஆக.12) தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
