தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் படுகாயமடைந்த 8 பேரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்கான பின்னணி குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
