இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ‘கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி’ என்ற பெயரில் 60 காசுகள் சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் நிதி முழுமையாக கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே செலவிடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சமூக நல வரி விதிப்பு நடவடிக்கை, அம்மாநிலத்தின் ஆதரவற்ற மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
