Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் ரயில் மோதி பலி

தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் ரயில் மோதி உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகுல்(30) என்பவர் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவு அப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தோதியா விரைவு இரயில் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த கேட் கீப்பர் ஓடி சென்று அந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருவர்‌ மீதும் இரயில் பயங்கரமாக

மோதி உள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சுமார் 500 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் இருவரின் உடலும் சிதறியது. தகவலறிந்த வந்த இரயில்வே போலீசார் 2 பேரின் உடல்

பாகங்களை சேகரித்து உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த கேட் கீப்பர் ராகுலுக்கு திருமணம் ஆகி ஆறு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!