மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு எம்எம்டிஆர் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் முறையான விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது. 2024ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரம் செய்யப்பட்டது. இது மாநிலங்களின் நிதி சுயாட்சியையும் சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
