Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் விலைவாசி உயர்வு: அரிசி கிலோ ரூ.100-ஐ தாண்டும் என தகவல்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு: அரிசி கிலோ ரூ.100-ஐ தாண்டும் என தகவல்

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரிசி விலை கடந்த 4 மாதங்களில் 4ஆவது முறையாக உயர்ந்துள்ளது.

ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை பொன்னி அரிசி தற்போது ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்பு ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை வெள்ளை பொன்னி அரிசி தற்போது ரூ.2,300-க்கு விற்பபனை செய்யப்படுகிறது. 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி, தற்போது ரூ. 1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அது போல 25 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிவாஜி பொன்னி அரிசியின் விலை ரூ.1,800-லிருந்து ரூ.2,400-ஆக உயர்ந்துள்ளது. அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.100-ஐ தாண்ட கூடும் என்று வெளியாகி இருக்கும் தகவல் மக்களை கலக்கமடைய செய்துள்ளது. அரிசி மட்டுமின்றி பிற அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருபக்கம் மளிகை பொருட்கள் மறுபக்கம் காய்கறிகள் என போட்டி போட்டு கொண்டு விலை அதிகரித்து கொண்டே வருகின்றன. ஆனால் இப்படி தங்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தூங்கி கொண்டிருக்கிறதா என மக்கள் ஆவேசமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

error: Content is protected !!