சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் செயலாளர்களின் அறைகள், அலுவலக வசதிகள் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்கும் பணிகள் டெண்டர் நடைமுறைகள் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
