Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

வாலிபர் வெட்டிக் கொலை – ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்த இளைஞர் ரஞ்சனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இச்சூழலில், சானாபுத்தூர் கிராமத்து விவசாய நிலப் பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

error: Content is protected !!