கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல மீன் சந்தையில், ஃப்ரீசரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மீன்களை ஹெல்மெட் அணிந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதனால் பெருமளவில் நஷ்டமடைந்த மீன் வியாபாரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை பிடிப்பதற்காக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
