Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு

திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.கா. தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இவர் பொன்மலை பொன்னேரி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் சுப்பிரமணியை வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்மலைப்பட்டி முல்லை நகரை சேர்ந்த லிபின் (வயது 23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக துவாரகன், நான்சி ஆகியோரரை தேடி வருகின்றனர்.

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராகவேந்திரன் (வயது 37). திருமணமாகாத இவர் கடந்த ஒன்றை மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் பிரச்சினை உள்ளதால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இவர் அலுமினியம் பாஸ்வேர்ட் மாத்திரையை உட்கொண்டு மயங்கி விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை விட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆவின் பால் பண்ணை அருகே சடலமாக கிடந்த வாலிபர்

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 23)இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இவருக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி கொட்டப்பட்டு பின்புறம் உள்ள ஆவின் பால் பண்ணை அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்‌. இது குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த அருள் பிரவீன் வயது (வயது19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்‌ அவரிடமிருந்து 20 போதை மாத்திரையில், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (வயது23) என்பவருடன் கடந்த வருடம் காதல் திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணிடம் மதிவாணன் மற்றும் அவரது தாய் பேபி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இது குறித்து அந்தப் பெண் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மதிவாணன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது செல்போனை எடுத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தையை தொடர்பு கொண்டு செல்போனை வந்து வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரது தாய் மற்றும் அந்த பெண்ணின் சகோதரி கணவர் ஆகியோர் மதிவாணன் வீட்டிற்கு சென்று செல்போனை தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மதிவாணனின் தாய் பேபி அந்தப் பெண்ணை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவாணன், அவரது தாய் பேபி (வயது42, ) சகோதரர் சசிகுமார் (வயது 21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கிருஷ்ணன் கோவில் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு 2 மர்ம நபர்கள், கோவிலின் சுவரில் பெட்ரோல் பாட்டிலை வீசி உள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரோஸ் கான் வயது 50 என்பவர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துகோயில் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய மர்ம ஆசாமி யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!