தீபாவளிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் ஆலைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சன்ன ரக நெல் கொள்முதலை அதிகரித்து நுகர்வோருக்கு உயர்தர அரிசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புகார்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது” என கூறியுள்ளார்.
