சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 5வது இடத்திலும், இலங்கை 6வது இடத்திலும் உள்ளது. இறுதிபோட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க தொடரை வெல்வது இரு அணிகளுக்கும் கட்டாயம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் களம் இறங்குவர். 3வது இடத்தில் தேவ்தத் படிக்கல், தொடர்ந்து கேப்டன் கில், ரிஷப் பன்ட், துருவ் ஜூரல் அல்லது சர்ப்ராஸ்கான், மானவ் சுதார், ஜடேஜா, குல்தீப் யாதவ், வேகத்தில் சிராஜ், குர்னூர் ப்ரார் இடம்பெறக்கூடும்.மறுபுறம் தனஞ்ஜெயா டிசில்வா தலைமையிலான இலங்கை அணியில் கமிது மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், டிக்வெல்லா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், அசித பெர்னாண்டோ. விஷ்வா ஃபெர்னாண்டோ, சுழலில் பிரபாத் ஜெயசூரியா இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். நாளை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டி சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
