முரசொலிமாறன் 93வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பு- முத்தமிழறிஞர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றிய வருமாகிய முரசொலி மாறனின் 93வது பிறந்த நாளினை முன்னிட்டு வருகிற 17ம் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் கோடம்பாக்கம், `முரசொலி’அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலிமாறன் திருவுருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மலர்மாலை அணிவிக்கின்றனர்.
அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட, பகுதி, வட்டக் திமுக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
