தமிழத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும், அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
