சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் விழா நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு, இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் நிகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
