ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, திருப்பதி காவல் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, அமைச்சருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர் ஒரு பக்கமாகச்

சாய்ந்தார். உடனடியாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர் கீழே விழுவதைத் தடுத்தனர். அமைச்சருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது; அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள்

தெரிவித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, அமைச்சர் உடல்நிலை தேறி, மீண்டும் விழாவில் பங்கேற்றார்.
