அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையிலான நிபுணர் குழுவினர் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் போது அணையின் கட்டுமானம், நீர் வெளியேற்ற மதகுகள், 16 கண் உபரிநீர் போக்கி பாலம், மண் கரை மற்றும் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளும் சோதிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முழுமையான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என நிபுணர் குழு தெரிவித்துள்ளார்.
