சேலத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் ரூ.12 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் கூறியுள்ள பயணிகள், பொதுமக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
