Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

திருச்சி கண்டோன்மெண்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மலர்விழி (வயது 54) கடந்த 12 ந் தேதி அன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 9 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மலர்விழிக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து மலர்விழி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். இது குறித்து மலர்விழி கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 9 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

பனியன் வியாபாரி மயங்கி விழுந்து சாவு

திருச்சி வயலூர் ரோடு சாந்தாஷீலா நகரை சேர்ந்தவர் அமீர்ஜான் (வயது 58) இவர் பனியன் வியாபாரம் சைக்கிளில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12 ந் தேதி உய்யக் கொண்டான் திருமலை பகுதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த ரர். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அமீர்ஜான் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அமிர் ஜான் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!