மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்தியாவில் LPG உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் LPG தேவையை சமாளிப்பதிலும், விநியோகத்தை சீராக வைத்திருப்பதிலும் உள்நாட்டு உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில், உள்நாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.
ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள இலக்கின்படி, 21 நிறுவனங்கள் தினமும் மொத்தம் 63,810 டன் LPG உற்பத்தி செய்ய வேண்டும்.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தினசரி 18,000 டன் LPG உற்பத்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மொத்தம் 31,470 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் LPG விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கவும், எரிவாயு தேவையை சமாளிக்கவும் இந்த இலக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
