கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாக ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவி அன்சிஜி, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் கண்டிப்பு… கல்லூரி மாணவி தற்கொலை
