Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து: குழந்தை உள்பட 9 பேர் பலி!

கொல்கத்தா நியூ மார்க்கெட் அருகே உள்ள ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நகரின் மிகவும் பிசியான மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்றான நியூ மார்க்கெட் அருகே உள்ள ‘ஃப்ரீ ஸ்கூல் ஸ்டிரீட் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 2:00 மணியளவில் பற்றிய இந்த தீயால் கட்டிடத்திற்குள் பலத்த புகையும், நெருப்பும் மூண்டது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. மேலும், ஒரு பேரிடர் மேலாண்மை குழுவும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் கைகோர்த்தது. தீயணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் ஏசி வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேற்குவங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் ஹோட்டல் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!