மதுபோதையில் சுருண்டு விழுந்த பயணி: ‘நைஸாக’ பாக்கெட்டை பதம் பார்த்த திருடன் – கோவை, சிங்காநல்லூரில் அதிர்ச்சி வீடியோ வைரல்!
தூங்கியவரைச் சுற்றி சுற்றி வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்: கோவையில் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பும் ஷாக்கிங் காட்சி!
கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவில் மது போதையில் சுருண்டு கிடந்த பயணியிடம் மிக நைஸாகப் பர்ஸை சுருட்டிய திருடனின் லீலைகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு மது போதை தலைக்கேறிய நிலையில் நபர் ஒருவர் சுயநினைவின்றிப் படுத்துக் கிடந்து உள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவன், அந்தப் பயணியின் அருகே அமைதியாக அமர்ந்து ‘ஸ்பாட் விசிட்’ அடித்து உள்ளான். சுற்றுமுற்றும் பார்த்து நைஸாக நகர்ந்து, போதையில் இருந்தவரின் பாக்கெட்டில் கைவைத்து அவரிடம் இருந்த பர்ஸை மிகச் சாமர்த்தியமாகச் சுருட்டி உள்ளான். இதையெல்லாம் அங்கு இருந்த விழிப்புணர் உள்ள பயணி ஒருவர் தனது செல்போனில் தத்ரூபமாக ‘ரெக்கார்ட்’ செய்து சமூக வலைதளங்களில் தட்டிவிட, அந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள், பேருந்து நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என ஆதங்க வெளிப்பாடு காட்டி வரும் நிலையில், இந்த வைரல் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் பொதுமக்கள்.
