தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலில் மோசடி எனப் புகார் எழுந்த நிலையில் சென்னை, திருவள்ளூரில் உள்ளிட்ட நகரங்களில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பத் தொடர்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தீவிர ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை, பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில் 3 இடங்கள் என சென்னையில் 27 இடங்களிலும் அதே போன்று திருவள்ளூர், செங்கல்பட்டிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மின்மாற்றி கொள்முதல் உதிர்பகங்கள் வாங்குவதில் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக சோதனை தற்போது நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி மின்சார வாரியத்தை பொறுத்தவரை மின்மாற்றி கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 30 ஆம் தேதி பதியப்பட்ட FIR அடிப்படையில் இன்று காலை முதல் சோதனை தொடங்கியுள்ளது.
