மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளேட்டா மாகாணத்தில் உள்ள பின்பர் கிராமத்திற்குள் நேற்று (ஆக.19) புகுந்த ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலம் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பான மதரீதியான மோதல்களின் பின்னணியில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
