தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.20) பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில், அரசு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளி வரவுள்ள நிலையில், இந்த ஆய்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “விதிமீறல்கள் இருக்கிறதா? என்று தான் ஆய்வு செய்யப்படுகிறது. இதனால், ஆலைகள் பாதிக்கப்படாது” என்றார்.
