சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவியர் விடுதியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர் ராதிகா, விடுதி இரவு காவலர் சுமதி, சமையலர் கலைச்செல்வி, விடுதி காப்பாளர் விஜயலட்சுமியையும் மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ரகுபதிக்கு உதவியதாக ராதிகா கைது செய்யப்பட்டுள்ளார்.
