செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 31 வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோவளத்திற்கு காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கு முன்னதாக முதலமைச்சரின் வருகையால் ஈசிஆர் சாலைகளில் உள்ள அனைத்து பாதைகளும் 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவே போக்குவரத்து இல்லாமல் தடை செய்யப்பட்டுது.
மேலும் சாலை திரும்பும் இடத்தில் போலீசார் கயிறு கட்டி ஒரு வழி பாதையாக மாற்றியுள்ளனர். நீலாங்கரை முதல் அக்கறை வரை அனைத்து யூ டன்களும் தடை செய்யப்பட்டது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி குழந்தைகள் அழைத்து செல்லும் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே நீலாங்கரை சேர்ந்த பெற்றோர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு தங்களது குழந்தைகளை காரில் அழைத்து சென்று கொண்டிருந்த போது சாலையில் திரும்பும் வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட தூரம் சென்று சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
