Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுதி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு!” மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

சவுதி அரேபியா கடற்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஈரான் கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் சம்பவ இடத்திலேயே குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மற்றொருத் தமிழ்நாட்டு மீனவரான சங்கர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் ஈரான் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. உயிரிழந்த மீனவர்களின் உடல்களைத் தாயகத்திற்குக் கொண்டு வரவும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் இந்திய வெளியுறவுத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!