மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜாம்போயே கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தோண்டப்பட்ட மண் குவியல் சரிந்து விழுந்ததில் பலர் மண்ணுக்குள் புதையுண்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
