முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊரான கரூர் உடன் சேர்த்து அமைச்சர் நிர்மல்குமார் சட்டமன்றத்தில் பேசிய வார்த்தையால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வார்த்தை மட்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “ஒரு வார்த்தை பேசினால், மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். ஒரு வார்த்தையை பேசிவிட்டு பேரவைத் தலைவர் அதை நீக்குகிறேன் என சொல்கிறீர்கள். அது பொதுவெளியில் போன பின்பு அதை கேட்டுக்கொண்டு நாங்கள் ஊமையாக இருப்பதற்கு இந்த சபைக்கு வரவில்லை” என காட்டமாக பேசினார்.
