தென் அமெரிக்க நாடான பெருவில் நள்ளிரவு 1 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பரினகொச்சோஸ் மாகாணம் உபஹசொ நகருக்கு அருகே அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் 66 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது. ஐகா, ஆர்கியுபா உள்ளிட்ட நகரங்களிலும் கட்டிடங்கள் பலமாகக் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
